உங்கள் கார்ட்டில் பொருட்கள் இல்லை.

கூட்டுத்தொகை: $ 0.00

கேள்வியும் நானே பதிலும் நானே

 • 1. எந்தெந்த நாடுகளுக்கு ஷிப்பிங் செய்யப்படுகின்றது மற்றும் அதன் கட்டணங்கள் எவ்வளவு?

  தற்போது, நாங்கள் எங்களது பொருட்களை 16 நாடுகளுக்கு டெலிவரி செய்து வருகின்றோம். ஷிப்பிங் கட்டணங்கள் தேர்ந்தேடுக்கப்படும் பொருட்களின் எடை மற்றும் இலக்கிடத்தை பொருத்து நிர்ணயம் செய்யப்படும். உங்கள் இடத்தின் ஷிப்பிங் கட்டணத்தை அறிய, நீங்கள் ஷாப்பிங் கார்ட் பக்கத்தில் உள்ள ஷிப்பிங் கட்டண கால்குலேடரை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

 • 2. ஆன்லைனில் ஆர்டர் எவ்வாறு செய்வது?
  • நீங்கள் ஆர்டர் செய்வதற்கு முன் dubaibazaar.in மில் பதிவு செய்ய வேண்டும். (கெஸ்ட் பயனர் வசதியும் உள்ளது)
  • dubaibazaar.in  மில் பதிவு செய்த தகவலை புகுத்தவும்.
  • எங்களிடம் இருக்கும் எண்ணற்ற பொருள் வகைகளை பாருங்கள். எல்லா பொருட்களும் சாப்பாட்டு பொருட்கள், புடவைகள், அலங்கார பொருட்கள், பெண்கள் உடைகள், மின்னணு சாதனங்கள், குழந்தை பாராமரிப்பு பொருட்கள், பர்தா மற்றும் பொதுவான பொருட்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • நீங்கள் ப்ராண்ட் வகையாகவோ அல்லது பொருள் பெயர் கொண்டோ ஒவ்வொரு பிரிவிலும் பிரவுஸ் செய்து, பொருளை தேர்வு செய்த பின்பு, . Add to Cart என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  • நீங்கள் தேர்வு செய்த பொருட்கள் அனைத்தும் உங்கள் ஷாப்பிங் கார்ட்டில் பதிவு செய்யப்படும்.
  • பின்னர் ஷாப்பிங் கார்ட்டில் இருந்து பணம் செலுத்த நீங்கள் விரும்பும் தேர்வை தேர்வு செய்யலாம். உங்களுக்கு எளிதாக இருக்க நாங்கள் அனைத்து வங்கிகளின் மற்றும் கிரெடிட் கார்டு நிறுவனங்களுடன் இணைப்பு வைத்துள்ளோம். கூடுதலாக, காசோலை மற்றும் நேரடி வங்கி டெபாசிட் வசதியும் உள்ளது.
  • பேமென்ட் செலுத்துவதற்கு நீங்கள் அதன் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பில்லிங் மற்றும் ஷிப்பிங் முகவரிகளை பூர்த்தி செய்து பணம் செலுத்தும் முறையை தேர்வு செய்யவேண்டும்.
 • 3.பதிவு தொடர்புடைய கேள்விகள்

  கே : பதிவு செய்தல் கட்டயமா?
  ப : இல்லை, பதிவு செய்தல் கட்டாயம் இல்லை. நீங்கள் கெஸ்ட் பயனர் வசதியையும் பயன்படுத்தி கொள்ளலாம்.
  கே : பதிவு செய்தலுக்கு கட்டணங்கள் ஏதேனும் உள்ளதா?
  ப : இல்லை, Dubaibazaar.in பதிவு செய்வதற்கு கட்டணம் ஏதும் இல்லை.
  கே : பதிவு செய்யும் தருணத்தில் ஈமெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண் கட்டாயம் வழங்க வேண்டுமா?
  ப : ஆம்
  கே : எனது தனிப்பட்ட விவரங்கள் பாதுகாக்கப்படுமா?
  ப : ஆம். மேலும் விவரங்கள் அறிய எங்களது தனிக்கொள்கை பார்க்கவும்.
  கே : நான் நெடுநாட்கள் பயன்படுத்த வில்லையென்றால், எனது பதிவு ரத்தாகி விடுமா?
  ப : இல்லை, உங்களது பதிவு எப்பொழுதுமே நீக்கப்படாது.
  கே : நான் எனது பாஸ்வர்ட்டை மறந்து விட்டிருந்தால் என்ன செய்வது?
  ப : உங்களது பாஸ்வர்டை அறிய "கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா?" லிங்க்கை பயன்படுத்தி திரும்பி பெறலாம்.

 • 4. பணம் செலுத்தும் முறைகள் யாவை?
  • பணம் செலுத்த நீங்கள் விரும்பும் தேர்வை தேர்வு செய்யலாம். உங்களுக்கு எளிதாக இருக்க நாங்கள் அனைத்து வங்கிகளின் மற்றும் கிரெடிட் கார்டு நிறுவனங்களுடன் இணைப்பு வைத்துள்ளோம். கூடுதலாக, காசோலை மற்றும் நேரடி வங்கி டெபாசிட் வசதியும் உள்ளது
 • 11. நான் எனது பொருளை மாற்றி கொள்ள இயலுமா?

  ஆம், நீங்கள் ஆர்டர் செய்த பொருள் தவறாக வந்திருந்தால் அதனை நீங்கள் மாற்றி கொள்ளலாம். ஆனால், சரியான பொருள் உங்களுக்கு வழங்கப்படிருந்தால் அதனை மாற்றி கொள்ள இயலாது.

 • 12. Dubaibazaar.in  மற்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் இருந்து எவ்வாறு வேறுபட்டு இருக்கின்றது?

  முதல் முறையாக, தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், எங்கள் இணையதளம் முழுவதும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இரு மொழிகளிலும் இயங்கி வருகின்றது.


 • 13. dubaibazaar.in  மின் சிறப்பு அம்சங்கள் யாவை?
  • எங்கள் தளத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், முதல் முறையாக தமிழ் மற்றும் ஆங்கில மொழி இரண்டிலும் வழங்குகின்றோம்.
  • உலகம் முழுவதிலும் இந்தியாவையும் சேர்த்து எக்ஸ்பிரஸ் டெலிவரி குறைந்தபட்சம் 500 கிராம்களில் இருந்தும் இந்தியாவிற்கு மட்டும் நார்மல் டெலிவரி குறைந்தபட்சம் 5 கிலோவில் இருந்து டெலிவரி செய்யப்படும். (5 கிலோவிற்கு குறைவான பொருட்களுக்கு 5 கிலோ ஷிப்பிங் சார்ஜ் வசூலிக்கப்படும்.)
  • நீங்கள் விரும்பும் பொருள் எங்கள் தளத்தில் இல்லையென்றாலோ அல்லது நீங்கள் டெலிவரி செய்ய விரும்பும் நாடு எங்கள் தளத்தில் குறிப்பிடப்படவில்லை என்றாலோ, அதனை பெறுவதற்கு நீங்கள் ஒரு சிறப்பு விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்யவேண்டும்.
  • உங்கள் அன்புக்குரியவர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் பரிசு பொருட்கள் அனுப்ப (பிறந்த நாள் போன்றவை) தமிழ்நாட்டிற்கு மட்டும் டெலிவரி செய்யப்படும். இதனை பெறுவதற்கு நீங்கள் ஒரு சிறப்பு விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்யவேண்டும்.
 • 14. சிறப்பு விண்ணப்பபடிவம் எவ்வாறு செயள்முறைப்படுத்தப்படுகின்றது?
  • நீங்கள் விரும்பும் பொருள் எங்கள் தளத்தில் இல்லையென்றாலோ அல்லது நீங்கள் டெலிவரி செய்ய விரும்பும் நாடு எங்கள் தளத்தில் குறிப்பிடப்படவில்லை என்றாலோ அதனை பெறுவதற்கு  நீங்கள் ஒரு சிறப்பு விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்யவேண்டும்.
  • இந்த விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 2 நாட்களில் நாங்கள் உங்களுக்கு ஒரு மதிப்பீட்டை (கொடேஷன்) அனுப்புவோம். அதனை ஒப்புக்கொண்ட பிறகு நீங்கள் அந்த பொருளை ஆர்டர் செய்யலாம்.
 • 15. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆர்டர்கள் எவ்வாறு ஷிப்பிங் செய்யப்படுகின்றது?
  • இந்திய ஆர்டர்கள் விரைவாக இந்தியன் கொரியர் சர்விஸ் மூலமாக ஷிப்பிங் செய்யப்படும்.
  • கஸ்டம்ஸ் அல்லது டியுடீக்கள் ஏதேனும் இருந்தால் அதனை டெலிவரி வழங்கும் சமயத்தில் வாடிக்கையாளரே ஏற்க வேண்டும்.
  • இத்தகைய கட்டணங்களை நீங்களே கேரியருக்கு வழங்க வேண்டும்.
  • எல்லா வெளிநாட்டு ஆர்டர்கள் (இந்தியாவிற்கு வெளியில்) புகழ்பெற்ற அராமெக்ஸ் (ARAMEX) வாயிலாக ஷிப்பிங் செய்யப்படும்.

Close